டெல்லி மக்களைப் போல் தமிழக மக்களும் வரலாற்றை மாற்றி அமைப்பார்கள்- கமல் கட்சி கூட்டத்தில் கெஜ்ரிவால் பேச்சு

மதுரையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை கமல் இன்று தொடங்கினார். கட்சி கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-
இதுவரை நான் கமலின் ரசிகனாக இருந்தேன். இப்போது அவர் நிஜ வாழ்க்கையின் நாயகன். நிஜ வாழ்க்கையிலும் அவரது ரசிகனாக ஆனேன். கமல் நேர்மையானவர் மட்டுமல்ல, துணிச்சலானவரும் ஆவார். கடந்த சில மாதங்களாக கமல் காட்டிய துணிச்சலைப் பார்த்து வியந்தேன்.
ஊழல் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இடையே தமிழக மக்கள் சிக்கி கிடந்தனர்.  இப்போது ஊழலுக்கு எதிராக அனைவரும் இங்கே ஒன்றிணைந்ததை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் தற்போது நேர்மையான கட்சி உருவாகி உள்ளது. மக்கள் நேர்மையான கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. டெல்லி மக்களைப் போல தமிழக மக்களும் வரலாற்றை மாற்றி அமைப்பார்கள். ஊழல் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வை தூக்கி எறிய தமிழக மக்கள் தயாராகிவிட்டனர்.
நேர்மையான அரசு இருந்தால் அனைத்தம் சாத்தியம். டெல்லியில் நேர்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் தேர்தலில் ஊழலை விரும்புபவர்கள் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள். கல்வி வேண்டுமானால் கமலை ஆதரியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !