டென்மார்க் பிரண்டாபதி ஸ்ரீ அபிராமி அன்னையின் ஜெயந்தி விழா விஞ்ஞாபனம் – 2018

நிகழும் ஏவிளம்பி வருடம் தைத்திங்கள் 11ம் நாள் (24.01.2018) புதன்கிழமை வாக்கருளி காத்திருக்கும் ஸ்ரீ அபிராமி உபாசகி தாயாரின் ஜெயந்தி விழா விஞ்ஞாபனம் மங்களம் அருளும் டென்மார்க் பிரண்டாபதி ஸ்ரீ அபிராமி அம்மன் ஆலயத்தில் இடம்பெற ஸ்ரீ அபிராமி அம்பாளின் திருவருளும் ஆசிகளும் கை கூடியுள்ளன.

இப்புனித மங்களகரமான நன்னாளிலே ஸ்ரீ அபிராமி அன்னையாரின் கொலு மண்டபத்தில் ஸ்ரீ அபிராமி அன்னையாருக்கு பிற்பகல் 4 மணிக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம் பெற்று மங்கள வாத்தியங்கள் புடை சூழ, பஜனைப்பாடல்கள் முழங்க, பக்தர்கள் பூ மழை தூவ, கவின் நிறை சித்திர தேரிலே ஸ்ரீ அபிராமி அன்னை பவனி வரும் அருட் காட்சியும் இடம்பெறும்.

நிறைவாக ஸ்ரீ அபிராமி அன்னையாரின் திருவருளும் ஆசிகளும் கலந்த விபூதி பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்படும்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !