டென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்

டென்மார்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மதுரா சிவகுமார் அவர்கள் 01-12-2016 வியாழக்கிழமை தவறான சிகிச்சை காரணமாக டென்மார்க்கில் உயிரிழந்தார்.

சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த சிவகுமார் ஞானாம்பிகை(டென்மார்க்) தம்பதிகளின் ஆருயிர் புதல்வியும் 19 வயது நிரம்பிய சட்டத்துறை மாணவி செல்வி. மதுரா சிவகுமார் அவர்கள் அநியாயமாக வைத்திய நிபுணரின் பொறுப்பற்ற வைத்தியமுறையினால் கொல்லப்பட்டார்.

செல்வி மதுரா அவர்கள் சட்டத்துறையில் மிகவும் சிறப்பு தேர்ச்சி பெற்று ஏனைய மாணவர்களைவிட திறமையான புள்ளிகளை பெற்று கல்வியில் சாதனைகளை பெற்றுக்கொண்டிருக்கையில் சற்று சுகயீனம் அடைந்த நிலையில் ஓர் வைத்திய நிபுணரின் நேரடிக்கண்காணிப்பில் இருந்தபோது வைத்திய நிபுணர் தவறுதலாக மருந்துக்கலவைகளை கொடுத்தபோது மதுரா அவர்களின் தேக ஆரோக்கியம் மிகவும் மோசமடையத்தொடங்கியது.

தீடிரென அவர்களின் உயிர் பிரிய வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. துரதிஷ்டவசமாக வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனயீனத்தால் பறிபோன செல்வி. மதுரா சிவகுமாரின் இறுதிக்கிரியைகள் வார இறுதி நாட்களில் டென்மார்க் நாட்டில் நடைபெறும் என அன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

danmark01






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !