டிசம்பர் 12 இல் பரிசில் காலநிலை உச்சிமாநாடு – அதிபர் மக்ரோன் அறிவிப்பு

எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி, பரிசில் காலநிலை உச்சமாநாடு இடம்பெறும் என இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை Hamburg நகரில் இடம்பெற்ற G20 மாநாட்டின் ஊடகசந்திப்பில் ஜனாதிபதி மக்ரோன் இதனை தெரிவித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து தலைமையில் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடுசெய்யப்பட்டு இடம்பெற்றிருந்த காலநிலை உச்சமாநாடு உலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தது. ஒலோந்து ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்களின் பின்னர் ஏற்பாடு செய்திருந்த அதே மாநாட்டை, இம்மானுவல் மக்ரோன் பதவிக்கு வந்து வெறும் ஆறே மாதங்களில் நிகழ்த்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாநாடு ஒலோந்து தலைமையில் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. அதே திகதியிலேயே பரிசில் இம்மானுவல் மக்ரோனும் நடத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !