ஞாயிற்றுக் கிழமைகளிலும் பொதி விநியோக சேவைகள்! – La Poste புதிய முயற்சி!

ஒரு வருட கால சோதனை முயற்சிகளின் பின்னர், விரைவில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொதி விநியோக சேவையினை வழங்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான உத்தியோகபூர்வ செய்திகள் செப்டம்பர் 14 ஆம் திகதி தான் வெளியாகும் என்ற போதும், சில செய்திகள் தற்போது ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளன. La Poste இன் புதிய முயற்சியாக, வாடிக்கையாளர்களின் பொதியினை ஞாயிற்றுக்கிழமைகளிலும் அவர்களின் வீடுகளுக்கு விநியோகிக்க உள்ளதாக அறிய முடிகிறது. La Post இன் துணை சேவையான Chronopost இந்த பணியினை மேற்கொள்ள இருக்கின்றது. குறிப்பாக, பொதுமக்களுக்குள் அனுப்பப்படும் பொதிகள் அல்லாது, விற்பன்னர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிடும் பொதியினை மாத்திரம் இவ்வாறு வார இறுதி நாளிலும் விநியோகிக்க உள்ளனது.
பிரான்சில் இணையத்தளம் ஊடாக பொருட்கள் கொள்வனவு கடந்த 2016 ஆம் ஆண்டில் 1.03 பில்லியன்கள் எனவும், இது கடந்த 2015 ஆம் ஆண்டை விட 23 வீதம் அதிகம் எனவும், இந்த எண்ணிக்கை இனிவரும் காலங்களில் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !