ஜோர்தான் அரசர் மற்றும் அரசியை சந்தித்தார் பிரித்தானிய அரசி எலிசபெத்

பிரித்தானிய சென்றுள்ள ஜோர்தனின் அரசர் அப்துல்லாஹ் மற்றும் அரசி ரய்னா இருவரையும் பிரித்தானிய அரசி எலிசபெத் நேற்று சந்தித்துள்ளார்.

ஜோர்தனின் அரச தம்பதியர் , முதலீடு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு சர்வதேச மாநாட்டில் பங்கேற்க பிரிட்டனுக்கு நேற்று விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையிலேயே அரச குடும்பத்தினர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இம்மாநாட்டில் கலந்து கொண்ட ஸ்லோவேனியாவின் தலைவரான போருட் பஹோரையும்  அரசி எலிசபெத் சந்தித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !