ஜோர்ஜியாவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக சலோமே ஸுறாபிஷ்விலி தெரிவு!

ஜோர்ஜிய ஜனாதிபதி தேர்தலில் சலோமே ஸுறாபிஷ்விலி வெற்றிபெற்று, முதலாவது பெண் ஜனாதிபதி என் பெருமையை பெற்றுள்ளார்.

சுமார் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸில் பிறந்த முன்னாள் இராதஜதந்திரியான ஸுறாபிஷ்விலி 59 வீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற அதேவேளை, அவரை எதிர்த்து போட்டியிட்ட கிரிகல் வஷாட்ஸே 40 வீத வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஜோர்ஜியாவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஸுறாபிஷ்விலிக்கான பதவியேற்பு விழா, எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஸுறாபிஷ்விலி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டிருந்த போதிலும் ஆளும் ஜனநாயக ஜோர்ஜிய கட்சி அவருக்கான ஆதரவை வழங்கியிருந்தது. வஷாட்ஸே ஐக்கிய எதிர்க்கட்சி வேட்பாளராக தேர்தலில் களமிறங்கியிருந்தார்.

பிரான்ஸில் பிறந்த 66 வயதுடைய ஸுறாபிஷ்விலி, 2004ஆம் ஆண்டு முதல் 2005 வரை ஜோர்ஜியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !