ஜோந்தாம் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு முன் விசாராணைகளுக்காக விளக்கமறியலில்!

ஜோந்தாம் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு முன் விசாராணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றிருந்த போதும், நேற்று வெள்ளிக்கிழமையே இத்தகவல் வெளியாகியுள்ளது. கார்-து-லியோன் தொடரூந்து நிலையத்துள் குறித்த ஜோந்தாம் அதிகாரி வெடி பொருட்களை கொண்டு சென்றுள்ளார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விசாரணைகளை l’Inspection générale de la Gendarmerie nationale (IGGN) அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

எடுத்துச் செல்லபட்ட வெடிபொருட்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நேற்று முன் தினம் வியாழக்கிழமை நீதிபதி இந்த வெடி பொருட்களை ஆய்வுக்குட்படுத்தினர். பரிசின் தென் கிழக்கு பகுதி ஒன்றில் பணிபுரியும் குறித்த ஜோந்தாம் அதிகாரி 1989 ஆம் ஆண்டு பிறந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் முடியும் வரை அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜோந்தாமினர் தெரிவித்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !