ஜேர்மன் விமான விபத்து: ரஷ்யாவின் செல்வந்த பெண் உயிரிழப்பு
ஜேர்மனியில் இடம்பெற்ற விமான விபத்தில் ரஷ்யாவின் செல்வந்த பெண் உயிரிழந்துள்ளார்.
ரஷ்ய தனியார் விமான நிறுவனத்தின் இணை உரிமையாளரான நடாலியா ஃபிலேவா என்பவரே உயிரிழந்துள்ளார்.
மூன்று பேருடன் பயணித்த சிறிய ரக விமானம் தென்-மேற்கு ஜேர்மனியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விபத்திற்குள்ளாகியுள்ளது.
பிரான்சிலிருந்து தென் ஃபிராஹ்ஃபர்ட் நோக்கிய பயணித்துக் கொண்டிருந்த விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் விமானியும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த மூன்றாவது நபரும் ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் என சந்தேகிப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.