ஜேர்மன் விமான நிலைய ஊழியர்கள் பணிநிறுத்தம் – 600 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ஜேர்மனிய விமான நிலையங்களில் பணிபுரியும் பாதுகாப்பு ஊழியர்களின் பணிநிறுத்தப் போராட்டம் காரணமாக சுமார் 643 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துமாறு விமான நிலைய நிர்வாகங்களை வலியறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

குறிப்பாக ஜேர்மனியின் டஸ்ஸல்டோப், க்ளோங் மற்றும் ஸ்டட்காட் ஆகிய விமான நிலையங்களிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மொத்தமாக திட்டமிடப்பட்ட 1054 விமான பயணங்களில் 643 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் தெரிவித்துள்ளன.

அந்த விமான நிலையங்கள் ஒவ்வொன்றினதும் நாளாந்த பயணிகள் எண்ணிக்கை சராசரியாக 115,000 என்பதுடன் பிரதான பரிசோதனை மையங்களில் தாமத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஜேர்மனியில் உள்ள 23,000 பாதுகாப்பு பணியாளர்களிடமும் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெர்டி பொதுத் துறை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 23 ஆம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பாதுகாப்பு ஊழியர்களின் சம்பளத்தை 20 யூரோக்கள் அதிகமாக வழங்குமாறு தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !