ஜேர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்க்கெல் மீது தக்காளி வீசி தாக்குதல்!

ஜேர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்க்கெல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் எதிர்வரும் செப்டம்பர் 24ம் திகதி பொது தேர்தல் நடைபெறவுள்ளது. Christian Democratic Union of Germany கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக Heidelberg நடந்த கூட்டத்தில் 63 வயதான ஏங்கெலா மெர்க்கெல் கலந்துக்கொண்டார்.

ஏங்கெலா மெர்க்கெல் உரையாற்றி கொண்டிருந்த போது கூட்டத்திலிருந்த போராட்டகாரர்கள், பொய்யர் மற்றும் போலியானவர் என கத்திக்கொண்டு மெர்க்கெல் மீது தக்காளி வீசி தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு தக்காளி மெர்க்கெலின் மீது தாக்கியது.

2015 புலம்பெயர்ந்த நெருக்கடியின் போது புலம் பெயர்ந்தவர்களுக்கு ஆதரவாக ஏங்கெலா மெர்க்கெல் open doors என்ற கொள்கையை இயற்றினார்.

இதனால், ஆத்திரமடைந்த எதிர்ப்பாளர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இத்தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

 


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !