ஜேர்மனி நாட்டில் கார் மீது ரயில் மோதி விபத்து, பெண்கள் உள்பட 3 பேர் பலி!

ஜேர்மனி நாட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்கள் உள்பட 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள துரிங்கியா மாகாணத்தில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று பிற்பகல் நேரத்தில் சரக்கு ரயில் ஒன்று அதிவேக பயணத்தில் ஈடுப்பட்டுருந்தது.

அதே நேரம் சாலை வழியாக ஒரு காரும் பயணம் செய்துக்கொண்டு இருந்துள்ளது.

இந்நிலையில், Lohma பகுதிக்கு அருகில் வந்தபோது கார் திடீரென தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது.

அப்போது, அசுர வேகத்தில் வந்த ரயில் கார் மீது பயங்கரமாக மோதி சுமார் 200 மீற்றர் வரை இழுத்துச்சென்றுள்ளது.

இக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுனர் சிறிது தூர பயணத்திற்கு பின்னர் ரயிலை நிறுத்தியுள்ளார்.

விபத்துக் குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் ஹெலிகொப்டர் வரவழைக்கப்பட்டது.

ஆனால், காரில் பயணம் செய்த மூன்று பேரும் ஏற்கனவே உடல்கள் சிதறி பலியாகியுள்ளனர். விசாரணை செய்தபோது உயிரிழந்தவர்கள் 49 வயதான பெண். 17 வயதான சிறுமி மற்றும் 19 வயதான வாலிபர் எனத் தெரியவந்தது.

விபத்துக் குறித்து ரயில் ஓட்டுனர் பேசியபோது, தண்டவாளத்தின் குறுக்கே தடுப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், காரில் வந்தவர்கள் தடுப்பை மீறி தண்டவாளத்திற்கு வந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

ரயில் ஓட்டுனரின் ரத்தத்தை சோதனை செய்தபோது அவர் மது அருந்தியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

மூவரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள பொலிசார் இவ்விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !