ஜேர்மனி கிறிஸ்டியன் டெமக்ரட்ஸ் கட்சியின் புதிய தலைவர் தெரிவு

ஜேர்மனிய அதிபர் அஞ்செலா மெர்க்கல் 18 வருடங்களின் பின் கிறிஸ்டியன் டெமக்ரட்ஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக்கியதையடுத்து அன்னகிரெட் க்ரம்ப் கரன்பெளர் (Annegret Kramp-Karrenbauer) அக்கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சார்லண்ட் முன்னாள் முதலமைச்சரான அன்னகிரெட் 999 வாக்குகளில் 517 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். கட்சியின் முன்னாள் தலைவரான அஞ்செலா மெர்க்கலும் அவருக்கே ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டியன் டெமக்ரட்ஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அன்னகிரெட் க்ரம்ப் கரன்பெளர் (Annegret Kramp-Karrenbauer), ப்ரீட்ரிச் மெர்ஸ் (Friedrich Merz), ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) ஆகிய மூவரும் போட்டியிட்டனர்.

அஞ்செலா மெர்க்கலின் ஆட்சிக்காலம் 2021 ஆம் ஆண்டு முடிவடைந்ததன் பின்னர் நடைபெறவுள்ள தேர்தலில் ஜேர்மனியின் மிகப்பெரிய கட்சியான கிறிஸ்டியன் டெமக்ரட்ஸ் கட்சி வெற்றிபெற்றால் கட்சியின் தலைவரான அன்னகிரெட் க்ரம்ப் கரன்பெளர் (Annegret Kramp-Karrenbauer) ஜேர்மனியின் அடுத்த அதிபர் ஆக முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !