ஜேர்மனியை 2-1 என வீழ்த்தி ஹோப்மன் கிண்ணத்தை சுவிட்ஸர்லாந்து வென்றது!

ஜேர்மனியை 2-1 என வீழ்த்தி 2018/19 ஆம் ஆண்டுக்கான ஹோப்மன் கிண்ண தொடரை சுவிட்ஸர்லாந்து வெற்றி கொண்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் பெர்த் நகரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற 8 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான இறுதி போட்டியில் சுவிட்ஸர்லாந்து அணியும், ஜேர்மனி அணியும் பலப்பரீட்சை நடத்தின.

அதன்படி நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவினை  சுவிட்ஸர்லாந்தும், பெண்கள் ஒற்றையர் பிரிவை ஜேர்மனியும் கைப்பற்றியது. இந்நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் கலப்பு இரட்டையர் பிரிவில் பெலிண்டா பென்சிக்/ரோஜர் பெடரர் மற்றும்  ஏஞ்சலிக் கெர்பர்/அலெக்சாண்டர் ஸ்வேரேவ்  மோதினர்.

விறுவிறுப்பாக இடம்பெற்ற குறித்த போட்டியின் முதல் செட்டை 4-0 என ரோஜர் பெடரர்/ ஏஞ்சலிக் கெர்பர் ஜோடி கைப்பற்றியது. இதனை தொடர்ந்து பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடிய ஜேர்மனி அணி 4-1 என கைப்பற்றியது.

தொடர்ந்தும் இடம்பெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி செட்டை  சுவிட்ஸர்லாந்து வீரர்கள் கைப்பற்றினர்.

இறுதியில் 4-0 1-4 4-3 என செட்டை வென்று இந்த ஆண்டுக்கான ஹோப்மன் கிண்ணத்தை சுவிட்ஸர்லாந்து கைப்பற்றியுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !