ஜேர்மனியை அச்சுறுத்தும் பனிப்பொழிவு – அவசரகால நிலை பிரகடனம்!

தெற்கு ஜேர்மனியில் கடும் பனிப்பொழிவு காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையிலேயே, தெற்கு ஜேர்மனியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இன்று(திங்கட்கிழமை) பாடசாலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகனங்களின் முன் விளக்குகளை ஒளிரவிட்டவாரே வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !