ஜேர்மனியில் LUFTHANSA விமான சேவை நிறுவனத்தில் 8000 புதிய வேலைவாய்ப்புகள்

ஜேர்மனியின் பிரபல LUFTHANSA விமான சேவை நிறுவனத்தின் தரத்தை உயர்த்திடும் வகையில் நடப்பாண்டில் 8000 புதிய பணியாளர்களை நியமிக்கவுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் முக்கிய விமான சேவை நிறுவனமாக திகழ்ந்து வருவது LUFTHANSA நிறுவனம்.

ஜேர்மனியின் விமான சேவைகளில் முக்கிய பங்கு வகித்து வரும் இந்நிறுவனம், சமீபத்தில் Eurowings, Swiss Air, Austrian and Brussels Airlines உள்ளிட்ட சிறிய நிறுவனங்களை விலைக்கு வாங்கியது.

இதற்காக கடந்தாண்டு ஏறத்தாழ 3000 நபர்களை பணியில் அம்ர்த்தியுள்ள அந்நிறுவனம், 2018-ஆம் ஆண்டில் 8000 புதிய நபர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதன்படி புதிதாக நியமிக்கப்பட உள்ளவர்களில் சரிபாதி நபர்கள் விமான ஊழியர்களாகவும், 2500 நபர்கள் LUFTHANSA-விற்கும், 2700 நபர்கள் Eurowings நிறுவனத்துக்கும் நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

LUFTHANSA-வின் போட்டி நிறுவனங்களான Ryanair or UK-based Easyjet உள்ளிட்ட சில நிறுவனங்களைவிட வர்த்தகத்தை அதிகரித்து காட்டவே இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஜேர்மனியின் மற்றொரு முக்கிய நிறுவனமான ஏர் பெர்லின் நிறுவனத்தை LUFTHANSA பெற்றுக்கொள்ள ஐரோப்பிய ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !