ஜேர்மனியில் Carnival கொண்டாட்டங்கள் ஆரம்பம்

ஜேர்மனிய Carnival ஆரம்பமாகியுள்ள நிலையில் ஜேர்மனிய நகரங்கள் பலவும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன.

Carnival ஐ முன்னிட்டு காட்டு மிருகங்கள், பிசாசுகளை போன்றே ஆடை அணிந்தவாறே தெருக்களில் நூற்றுக்கணக்கானோர் அணிவகுத்து சென்று Carnival ஐ சிறப்பித்தனர்.

ஜேர்மனிய ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லெகர்ஃபேர்ட்டின் ஆடைத் தொகுப்புக்களே அதிகம் இடம்பெற்றிருந்தன.

மரபுவழி உள்ளூர் நேரப்படி காலை 11.11 மணிக்கு Carnival ஆரம்பமானது.

Carnival இல் சிறப்பம்சமாக வண்ணமயமான ஆடைகளோடு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். அத்துடன், பெரும்பாலும் சர்ச்சைக்குரிய, நையாண்டித்தனமான மிதவைகளும் இடம்பெற்றிருந்தன.

ஜேர்மனியின் மேற்கு மற்றும் தெற்கில் Carnival கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !