ஜேர்மனியில் 100 பேரை கொன்ற கொடூர தாதி!

ஜேர்மனியில் நோயாளிகளுக்கு வைத்தியர்கள் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட மருந்துகளை வழங்கி தாதியொருவர் 100 பேரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியை சேர்ந்த 41 வயதான ஆண் நர்சு நீல்ஸ் ஹேஜெல் என்ற இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றியுள்ளார்.

இந்த நிலையில் நோயாளிக்கு அளவுக்கு அதிகமான ஊசி மருந்து மற்றும் மாத்திரைகளைக் வழங்கி வந்த நிலையில் அதில் பலர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கடந்த 2005 ஆம் ஆண்டில் டெல்மென் ஹார்ஸ்ட் வைத்தியசாலையில் நோயாளிக்கு மருத்துவர் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட ஊசி செலுத்தப்பட்ட போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே இவரது சிகிச்சையின் காரணமாக மேலும் பலர் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்மென் ஹார்ஸ்ட் வைத்தியசாலையில் கடந்த 2000 முதல் 2005 ஆம் ஆண்டு வரை 65 பேரும், ஒல்டன்பர்க் வைத்தியசாலையில் 35 பேரும் இவரால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த கொலைகள் குறித்து ஓல்டன்பெர்க் நகர நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. ஜேர்மனியில் உலகப் போருக்கு பின் நடந்த மிகப்பெரிய குற்ற சம்பவமாக இது கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !