ஜேர்மனியில் பொதுமக்களுக்கு டிசம்பர் 27ஆம் திகதி முதல் கொவிட்-19 தடுப்பூசி!
ஜேர்மனியில் எதிர்வரும் டிசம்பர் 27ஆம் திகதி முதல் பொதுமக்களுக்குச் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுமென சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா, அமெரிக்கா, பஹ்ரைன், கனடா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்தப் பட்டியலில் ஜேர்மனியும் இணையவுள்ளது.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நாங்கள் டிசம்பர் 27ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
அதிபர் அங்கலா மேர்கல் தலைமையில் எடுக்கப்பட்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது’ என கூறினார்.
ஜேர்மனியில் கொரோனா பரவலைத் தடுக்கக் கட்டுப்பாடுகளை அதிகரிக்குமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்ததையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...