ஜேர்மனியில் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரை மோதச் செய்து தாக்குதலுக்கு முயற்சித்ததாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜேர்மன் சட்டத்தரணிகளால் குறித்த சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளனர்.

பல்வேறு கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டடப்பட்டு சந்தேகநபர் மீது முறையாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சட்டத்தரணிகளின் வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்த முயற்சித்த சம்பவத்தில் எட்டு பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் சிரியா, ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் சிரிய பெண்ணொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்கை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி சம்பவம் தொடர்பில் 54 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !