ஜேர்மனியில் தாக்குதல்; கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் இலங்கை அகதி அனுமதி

ஜேர்மனியில் மூன்று ஜேர்மனியர்கள் சேர்ந்து தாக்கியதில் இலங்கை அகதியொருவர் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதலுக்கு இலக்கான இலங்கையர் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், தாக்குதலுக்குள்ளானவர் 22 வயது இளைஞர் என்றும், தனது முகாமுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

பேருந்து நிறுத்தம் ஒன்றுக்கு அருகாமையில் வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் எவரையும் அடையாளம் காண முடியவில்லை என்றும் தெரிகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !