ஜேர்மனியில் சட்டப்பூர்வமாகிறது ஓரினச்சேர்க்கை திருமணம்!

ஜேர்மனியில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான வாக்கெடுப்பு வெற்றி பெற்றுள்ளதால் விரைவில் சட்டபூர்வமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேர்மனி நாடாளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவாகவே வாக்களித்தனர், தொடர்ந்து குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி ஓரினச்சேர்க்கை திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது, எனினும் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் தான் எதிராக வாக்களித்ததாகவும், மற்றவர்களின் விருப்பதிற்கு ஏற்ப மசோதா தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !