Main Menu

ஜேர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட பலர் கைது

ஜேர்மனி அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து தலைநகர் பெர்லினில் நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்ற 300 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பேர்லின் நகர வீதிகளில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் 38 ஆயிரம் பேர் வரை பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது, பிராண்டன்பேர்க் பகுதியில் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கோரிய போது குறித்த பேரணியில் பங்கேற்ற வலதுசாரி கிளர்ச்சியாளர்கள் போத்தல்கள் மற்றும் கற்களைக் கொண்டு தாக்கியதாக குறிப்பிடப்படுகிறது.

இதனை அடுத்து, அப்பேரணியில் பங்கேற்ற 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்ற பேரணிகள் ஏனைய ஐரோப்பிய நகரங்களிலும் இடம்பெற்றன. இதில் பங்கேற்ற சில போராட்டக்காரர்கள் கொரோனா வைரஸை ஒரு புரளி என குறிப்பிட்டார்கள்.

லண்டன் ட்ராஃபல்கர் சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் மற்றும் ‘5ஜி’க்கு எதிராக குரல் எழுப்பியிருந்தனர்.

‘முகமூடிகள் புதிர்கள்’ எனவும் ‘புதிய இயல்பு புதிய பாசிசத்துக்கு சமனானது’ எனவும் போராட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இதேபோன்ற போராட்டங்கள் பரிஸ், வியன்னா மற்றும் சூரிச் ஆகிய நகரங்களிலும் இடம்பெற்றிருந்தன.