ஜேர்மனியில் ஒற்றுமையை தனது கட்சி சீர்குலைக்கவில்லை-மார்ட்டின் ஷுல்ஸ்

ஜேர்மனியில் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையிலும், தனது கட்சி ஈடுபடவில்லை என சமூக ஜனநாயகக் கட்சித் தலைவரும் ஜேர்மன் அதிபர் வேட்பாளருமான மார்ட்டின் ஷுல்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

அவர் தனது முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, மேற்கண்டவாறு கூறினார்.

எமது நாட்டின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு நாம் எவரையும் அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது, துருக்கிய ஜனாதிபதி தையிப் ஏர்டோகனை விமர்சித்துள்ள அவர், ஜேர்மனியில் தேர்தல் பிரசாரங்களில் தலையிட முற்படுவது வெட்கக்கேடான முயற்சிக்குப் பொருந்தும் எனவும் கூறியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !