ஜேர்மனியில் அதிக பனிப்பொழிவு – அவசர நிலை அறிவிப்பு

தெற்கு ஜேர்மனியில் உள்ள பவேரியா மாநிலத்தில் உள்ள ஒரு நகரத்தில் அதிக பனிப்பொழிவு காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பவேரியாவில் உள்ள பெர்செத்ச்கேடென் என்றநகரில், பனிமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அப்பகுதியின் பல இடங்களிலும் பனிமலை சூழ்ந்துள்ளது.

மேலும் பனிப்படிவுகள் பாரிய அளவில் உள்ளதால், அந்த நகரத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

அத்தோடு ஒஸ்திரியாவின் சல்ஸ்பர்க்கின் தெற்குப் பகுதியும் பெரும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இன்று (வியாழக்கிழமை) மேலும் அரை மீட்டர் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இருந்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில் சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த 2006 ஆம் ஆண்டு கூரை மீது கடுமையான பனி சூழ்ந்து பின்னர் அது உடைந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தமையும் அவர்களில் பன்னிரண்டு குழந்தைகள் உள்ளடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !