Main Menu

ஜேர்மனியிலிருந்து பெல்ஜியத்திற்கு மாறுகிறது அமெரிக்க இராணுவத் தலைமையகம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கு அமைய 12 ஆயிரம் அமெரிக்கத் துருப்புக்கள் ஜேர்மனியில் இருந்து வெளியேறவுள்ளதால், அதன் தலைமையகத்தை ஜேர்மனியிலிருந்து பெல்ஜியத்திற்கு மாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜேர்மனியிலுள்ள 34,500 அமெரிக்க வீரர்களில், ஆறாயிரத்து 400பேர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்பதுடன் 5,600 பேர் ஏனைய நேட்டோ நாடுகளுக்கு மாற்றப்படுவார்கள் என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கருங்கடலுக்கு அருகிலுள்ள நேட்டோவின் தென்கிழக்கு பக்கத்தை வலுப்படுத்துவதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் என்றும் எஸ்பர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனியில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான டொனால்ட் ட்ரம்ப்பின் விருப்பத்தை இந்த முடிவு நிறைவேற்றுகிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், சில நகர்வுகள் வரும் வாரங்களுக்குள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares