Main Menu

ஜேர்மனியின் 40 வீதமானவர்கள் தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக ஜேர்மனியின் வயதான மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு உள்ளான பெருந்தொகை மக்கள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல மேலைத்தேய நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையினை எதிர் நோக்கியுள்ள நிலையில் அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள ஜேர்மனியின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn), ஜேர்மனியின் பலர் அவர்களது வயதுநிலை காரணமாக மிகுந்த பாதிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜேர்மனி உலகிலேயே இரண்டாவது பழமையான இனக்குழுவைக் கொண்ட நாடு. ஜேர்மானிய மக்களில் பலருக்கு பரவலாக உள்ள, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகிய நோய்களின் காரணமாகவும் குறித்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான நிலைப்பாடுகள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு சாதகமாக அமைந்துள்ள அதேவேளை வேறு பல தொற்று நோய்கள் ஏற்படும் அபாயங்களை ஏற்படுத்தியுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மானிய மக்கள் தொகையில் ஏறக்குறைய 40 வீதமானவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares