ஜேர்மனியின் வெளிவிகார அமைச்சர் அமெரிக்க மாநிலச் செயலாளரைச் சந்தித்தார்

ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் Heiko Maas அமெரிக்க மாநிலத் செயலாளர் Mike Pompeo வினை நேற்று (புதன்கிழமை) வொஷிங்டனில் சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது அணுசக்தித் திட்டத்தினை ஈரான் முற்றுமுழுதாகக் கைவிடவேண்டுமெனவும்   சிரியாவுடனான போரிலிருந்து ஈரான் விலகவேண்டும் எனவும் கடுமையான மாற்றங்களை  மைக் பொம்பே அமெரிக்கா சார்பில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த மாற்றங்களுக்குச் சம்மதிக்கவில்லையெனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ஈரானின் மீது விதிக்கும் பொருளாதாரத் தடைகளையும் அழுத்தங்களையும் ஈரான் ஏற்கவேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு ஈரானுடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறிய நிலை காணப்பட்டாலும் ஐரோப்பிய நாடுகள் ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையினைத் தொடர்ந்து பேணுமென ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் ஹெய்கோ மாஸ் ஊடகவியலாளர்களிடம் பேசும்போது தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !