ஜேர்மனியின் அதிவேக கடுகதி ரயிலில் தீ விபத்து!

ஜேர்மனியின் அதிவேக கடுகதி ரயிலொன்று பயணத்தின் இடைநடுவே திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

510 பயணிகளுடன் பயணித்த ரயில் கொலோன் மற்றும் முனிச்சிற்கு இடைப்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் நேற்று (வெள்ளிக்கிழமை) விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த தீ விபத்தில் பயணிகள் எவருக்கும் பாதிப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்திற்குள்ளான ரயில் சம்பவ இடத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில். குறித்த பகுதியூடான ரயில் போக்குவரத்து இவ்வார இறுதி முழுவதும் தடை செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இத்தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !