ஜேர்மனிக்கு வரும் துருக்கி நாட்டவர்கள் அச்சமின்றி பயணம் செய்யலாம்-ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல்

ஜேர்மனிக்கு வரும் துருக்கி நாட்டவர்கள் அச்சமின்றி பயணம் செய்யலாம் என ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனிக்கு பயணம் செய்யும் துருக்கி நாட்டவர்கள் அல்லது ஜேர்மனியில் வசிக்கும் துருக்கியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என சமீபத்தில் துருக்கி வெளிவிவகாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல், ஜேர்மனியில் வசிக்கும் துருக்கி நாட்டவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

ஜேர்மனிக்கும் வருபவர்களும் எவ்வித அச்சமின்றி பயணம் செய்யலாம்.

ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன், இங்கே எந்தவொரு பத்திரிக்கையாளரும் கைது செய்யப்படவில்லை, காவலில் வைக்கப்படவில்லை.

ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்தை வெளிப்படுத்த சுதந்திரம் உண்டு, இதை நினைத்து பெருமைப்படுகிறோம் என தெரிவித்துள்ளார்.



(மேலும் படிக்க) »



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !