ஜேர்மனிக்கான அமெரிக்கத் தூதராக ரிச்சர்ட் க்ரேனில் பதவியேற்பு

ஜேர்மனிக்கான அமெரிக்கத் தூதராக ரிச்சர்ட் க்ரேனில் பதவியேற்றார். ஜோன் போல்டனின் முன்னாள் உதவியாளராக இருந்த இவர் நேற்று ஜேர்மனிக்கான அமெரிக்கத் தூதராக பதவியேற்றுள்ளார்.

இவ்விழாவானது நேற்று (வியாழக்கிழமை)  இடம்பெற்றது, அப்போது ரிச்சர்ட் க்ரேனின் பங்காளர் மட் லாஸ் சத்தியம் செய்யும் பைபிளினைக் கொண்டுவர அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான மில்கி பென்ஸ் க்ரேனுக்கு பதிவிப்பிரமானம் செய்துவைத்தார்.

இவ்விழாவில் அமெரிக்க துணை ஜனாதிபதி பேசியபோது, “கிரேன் தன்னுடைய அனுபவம் மற்றும் நேர்மை இவற்றைக்கொண்டு அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையில் வரலாற்று ரீதியிலான நீடித்த நல்லுறவினைக் கட்டியெழுப்ப வேண்டும்” எனக் கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !