Main Menu

ஜெர்மனியில் கலை நிகழ்வில் நடந்த துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பேர்லின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைத் தேட பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பேர்லின் பொலிஸார் டுவிற்றர் பக்கத்தில் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனிய தலைநகரின் க்ரூஸ்பேர்க் (Kreuzberg) மாவட்டத்தில் உள்ள ரெம்பொட்ரோம் மண்டபத்தில் (Tempodrom hall) துருக்கிய கலை நிகழ்ச்சியின்போது மக்கள் அதிகளவாக கூடியிருந்த சமயத்தில் நேற்று இரவு இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, மண்டபம் சுற்றிவளைக்கப்பட்டதுடன் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ள நிலையில் இன்று காலை வரை துப்பாக்கிதாரி கைதுசெய்யப்படவில்லையென பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.