ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் சி.பி.ஐ விசாரணை நடத்துவதே சிறந்தது: மு.க ஸ்டாலின்

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்கு இந்திய மத்திய புலனாய்வு பிரிவினர், விசாரணை நடத்துவதே சிறந்ததென தி.ம.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“ஜெயலலிதா மரணம் தொடர்பில் முறையாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். அந்தவகையில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மங்கள் இருப்பது உண்மை என்பதால், இந்திய மத்திய புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்துவதே சிறந்ததாகும்.

அப்போதுதான் நாட்டு மக்களுக்கு உண்மைத் தெரியவருமே ஒழிய, ஆறுமுகசாமி ஆணையகத்தினால் ஒருபோதும் உண்மை வெளிப்படுத்தப்படமாட்டாது.

இதேவேளை 2019ஆம் ஆண்டு  நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், மிகப்பெரிய மாற்றம் நிச்சயம் ஏற்படுவது உறுதி” என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !