ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களை அ.தி.மு.க.வே தண்டிக்கும் – ஜெயகுமார்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள், யாராக இருந்தாலும், அவர்களை அ.தி.மு.க. அரசே தண்டிக்கும் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அவர் ஆட்சிக்கு வந்தால் சம்பந்தப்பட்டவர்களை சிறைக்கு அனுப்புவோம் என்று கூறியிருக்கிறார். தி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வராது. அவர்கள் ஆட்சிக்கு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களை காட்டிலும் அதிக அக்கறை எங்களுக்கு உண்டு. யார் தவறு செய்தாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்“ என தெரிவித்துள்ளார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !