ஜெயலலிதாவின் சொத்து, கடன் விபரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜெயலலிதாவின் சொத்து, கடன் விபரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி புகழேந்தி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன்,

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து விபரங்கள் மற்றும் கடன் விபரங்களை தாக்கல் செய்ய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்தது, குறித்த வழக்கை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

ஜெயலலிதாவின் வேதா இல்லம் 100 கோடி ரூபாய் மதிப்பிருக்குமென உயர்நீதிமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !