ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலானது – நித்யா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவரின் கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலானது என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது நமக்கு பொறுப்பு தேவை சாதாரணமாக நடித்துவிட முடியாது. படத்தில் எந்த இடத்திலும் நித்யா மேனன் தெரியக்கூடாது. அந்த பொறுப்பும் கடமையும் இயக்குனருக்கு மட்டுமல்ல நடிக்கும் நடிகைகளுக்கும் அந்த பொறுப்பும் கடமையும் இருக்க வேண்டும்.

இயக்குனர் பிரியதர்ஷினி கதையை சொல்லும்போதே அவரது அர்ப்பணிப்பு புரிந்துவிட்டது. அதனால்தான் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன். உடலளவிலும் மனதளவிலும் ஜெயலலிதாவாக நான் மாற வேண்டியிருக்கிறது. அவரது முழு வாழ்க்கையையும் திரைக்கு கொண்டு வர இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !