ஜெனீவாவில் கடும் பனிப்பொழிவு – விமான சேவைகள் பாதிப்பு!

கடும் பனிப்பொழிவு காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமைந்துள்ள ஜெனீவாவில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் கனடா, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று(வெள்ளிக்கிழமை) முதல் ஜெனீவாவில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருகின்றது.

இதன்காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீதிகளில் குவிந்துள்ள பனிப்படலம் காரணமாக போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

முக்கிய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இன்றைய தினமும் அங்கு கடும் குளிரான காலநிலை நிலவக்கூடும் என அந்நாட் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !