ஜெனிவாவில் பரிசுத்தம் இல்லாத வெள்ளையார்கள் எம்மீது விசாரணைகளை நடத்துகின்றனர்-மனோ கணேசன்

ஜெனிவாவில் பரிசுத்தம் இல்லாத வெள்ளையார்கள் எம்மீது விசாரணைகளை நடத்துகின்றனர் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடு என்ற வகையில் நல்லிணக்கத்தை இழந்தமையே ஜெனிவாவில் இலங்கைப் பிரச்சினையைக் கையாள்வதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார்.

‘மொழி வளர்ப்போம் மனதை வெல்வோம்’ என்னும் கருப்பொருளில் அரசகரும மொழிக் கொள்கையை பாடசாலை மாணவரிடையே நடைமுறைபடுத்தும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேசிய ஒருமைப்பாடு,அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் இதனை கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “ஜெனிவாவில் பரிசுத்தம் இல்லாத வெள்ளையார்கள் எம்மீது விசாரணைகளை நடத்துகின்றனர். அவர்களின் பிழைகள் இலங்கையில் இடம்பெற்றதை விடவும் பெரியவை. ஒரு வகையில் இது நகைச்சுவையானது.

நாட்டில் உள்ளவர்கள் இரு மொழிகளையும் கற்றால் இவ்வாறான பிரச்சினையிருக்காது. நாட்டில் மிகப்பெரிய தேசியப் பிரச்சினை உள்ளதாகத் தெரிவித்துவருகின்றனர். நாடாளுமன்றத்தில் உள்ள நல்லிணக்கத்தை விட பாடசாலைகளில் நல்லிணக்கம் காணப்படுகின்றது. நாட்டின் பிரச்சினைகளை உள்நாட்டிலேயே தீர்த்துக்கொள்ளாமல் நாம் இதுவரை தோல்வியடைந்து காணப்படுகின்றோம்” என்று அவர் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !