ஜூலை மாத இறுதியில் புதிய பிரதமர் பதவியேற்பார்!
ஜூலை மாத இறுதியில் புதிய பிரித்தானிய பிரதமர் பதவியேற்பாரேன ஆளுங்கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்சி தெரிவித்துள்ளது. புதிய பிரதமர் பதவியேற்கும் வரை பிரதமராக பணியாற்றுன் என தெரேசா மே தெரிவித்துள்ளார்.
கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டி ஜூன் மாதம் 10 ஆம் திகதியில் ஆரம்பிக்குமென கட்சியின் தலைமை அதிகாரியும் நிறைவேற்றுக்குழுவும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 7 ஆம் திகதி பதவி விலகவுள்ள பிரதமர் தெரேசா மே-யின் அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் விடாமுயற்சிக்கும் இந்த அறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பதவியேற்கும் கொன்சர்வேற்றிவ் கட்சி தலைவர் பொதுத்தேர்தலில் மூலம் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.