ஜூலை மாதம் விண்வெளிக்கு பயணிக்கும் பிரித்தானிய கோடீஸ்வரர்!

அடுத்து வரும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் தனது வேர்ஜின் நிறுவனத்தின் விண்கலத்தில் தாம் விண்வெளிக்கு பயணிக்கவுள்ளதாக பிரித்தானிய கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் தெரிவித்துள்ளார்.

மனிதன் நிலவில் முதன்முதலாக கால் பதித்து ஐம்பது வருடங்கள் பூர்த்தியடைவதை கொண்டாடும் வகையில் தனது பயணம் அமையவேண்டுமென விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் அப்பல்லோ 11 விண்கலம் 1969 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி முதன்முதலாக நிலவை சென்றடைந்தது.

தமது வேர்ஜின் நிறுவனம் விண்வெளி பயணத்துக்கு தேவையான அனைத்து சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாகவும் ஜூலை மாதமளவில் தமது விண்வெளி பயணம் சாத்தியமானதாக அமையுமெனவும் ரிச்சர்ட் பிரான்சன் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !