ஜூலியன் அசான்ஜேக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை?
விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜேக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜே மீது சுவீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இருந்த நிலையில் அவர் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் வைத்து கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்
ஈக்வடார் அரசு அசாஞ்சேவுக்கு வழங்கிய அடைக்கலத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து அவர் தூதரக அதிகாரிகளால் அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லபட்டார்.
நீதிமன்றத்தில் அசாஞ்சே சரணடையத் தவறிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டதுடன் அவர் அமெரிக்க அரசின் ரகசியத் தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டையும் எதிர்கொள்ளவுள்ளதனால் அவர் ஐந்து வருடம் சிறை தண்டனை பெறலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.