ஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்?

சமீபத்தில் நடந்து முடிந்த கூகுள் IO 2018 நிகழ்வில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. இதில் இடம்பெற்றிருந்த அம்சங்களில் ஒன்றான மென்ஷன் எனும் அம்சம், மின்னஞ்சல் டைப் செய்யப்படும் போது இடையே மற்றவர்களை டேக் செய்ய @ குறியீட்டை பயன்படுத்த வழி செய்கிறது.
இந்த அம்சம் ஜிமெயிலில் மின்னஞ்சல் டைப் செய்யும் போது இடையே கான்டாக்ட்களை சேர்க்கும் வசதியை வழங்குகிறது. அதன் படி கான்டாக்ட்களை மின்னஞ்சலில் இணைக்க ‘@’ குறியீடு மற்றும் குறிப்பிட்ட கான்டாக்ட்-இன் பெயரை டைப் செய்ய வேண்டும். இதே அம்சம் கூகுள் பிளஸ் தளத்தில் ‘+’ குறியீடு மற்றும் பெயரை டைப் செய்தால் வேலை செய்கிறது. @ அல்லது + குறியீடுகளுடன் பெயரை டைப் செய்ய துவங்கும் போதே குறிப்பிட்ட கான்டாக்ட்களை பார்க்க முடியும். அதில் இருந்து கான்டாக்ட்-ஐ தேர்வு செய்யலாம்.
பயன்படுத்த எளிமையாக இருப்பதோடு மின்னஞ்சல் சேவையை அதிகளவு பயன்படுத்துவோருக்கு இது அதிகப்படியான நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இந்த அம்சம் ஜிமெயிலின் ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் இயங்குதள செயலிகளில் இன்னமும் அப்டேட் செய்யப்படவில்லை என்பதால் முதற்கட்டமாக வாடிக்கையாளர்கள் இதனை வெப் சேவையில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
சமீபத்தில் ஜிமெயில் தளத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. இவற்றில் ஒன்று தான் நட்ஜ் (Nudge), இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் செட் செய்த நேரத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சல் குறித்த நினைவூட்டலை வழங்கும்.
புதிய நட்ஜ் அம்சம் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தை செட் செய்து, மின்னஞ்சல் மீண்டும் எப்போது இன்பாக்ஸ்-இல் தோன்ற வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். இவ்வாறு செய்ததும் குறிப்பிட்ட மின்னஞ்சல் உங்களது இன்பாக்ஸ்-இல் தெரியும். இந்த அம்சம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது.
உங்களுக்கு வரும் புதிய மின்னஞ்சல்களை கேமரா மூலம் பார்க்கப்படும். இந்த அம்சம் ஜிமெயில் தளத்தின் வலதுபுறத்தில் காணப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் மின்னஞ்சல்களை கொண்டு வருகிறது. இந்த அம்சம் தானாகவே ஆக்டிவேட் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், விரும்பாதவர்கள் இதனை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !