ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் தமிழ்நாடு!- ஆயிரக்கணக்கான வீரர்கள் முன்பதிவு

மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலைமேடு, அலங்கா நல்லூர், ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவுகள் இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளன.

தைப்பொங்கலை முன்னிட்டு நடத்தப்படவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக அவனியாபுரம், பாலைமேடு, அலங்காநல்லூர், ஆகிய பகுதிகளில்,  போட்டிகளில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் முன்பதிவுகள் என்பன இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்தார்.

அலங்காநல்லூர் அரச பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (சனிக்கிழமை) இந்த தேர்வுகள் இடம்பெறுகின்றன.

இதன்போது,  அவனியாவுரம் மற்றும் .அலங்காநல்லலூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் . வீரர்களுக்கான முன்பதிவுகள் நடைபெற்றன.

இந்த முன்பதிவிற்கு வரக்கூடிய, வீரர்கள் 150 சென்ரிமீற்றர் உயரத்திற்கு குறையாமலும், உயரத்திற்கு தகுந்த எடையுடனும் இருக்க வேண்டும். அவர்கள் 18 வயது முதல் 40 வயதிற்குட்டபட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்பன விதிமுறைகளாகும்.

இந்நிலையில், முன்பதிவிற்காக வருகைத்தந்துள்ள வீரர்களுக்கான உடற்தகுதி பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென ஐந்து வைத்தியர்களைக் கொண்ட 10 மருத்துவக் குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !