ஜம்மு காஷ்மீருக்கு மோடி விஜயம்!: வீட்டுக்காவலில் பிரிவினைவாத தலைவர்

ஜம்மு காஷ்மீருக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரிவினைவாத அமைப்பு குறித்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையென கூறி பிரிவினைவாத தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக்கை, பொலிஸார் இன்று வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.

ஸ்ரீநகர், நைகீன் பகுதியிலுள்ள மிர்வாய்ஸ் பரூக்கினுடைய வீட்டைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வீட்டுக்காவலிலுள்ள மிர்வாய்ஸ் பரூக் உமரும், இவ்விடயம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !