Main Menu

ஜப்பானின் Diamond Princess சொகுசுக் கப்பலில் மேலும் 67 பேருக்கு நோய்த்தொற்று

ஜப்பானின் Yokohama துறைமுகத்துக்கு அருகில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள Diamond Princess சொகுசுக்கப்பலில் மேலும் 67 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பதாக ஜப்பானிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர்களையும் சேர்த்து கப்பலில் உள்ள பயணிகளில் இதுவரை 285 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

அவர்களைத் தவிர்த்து, தனிமைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்ட அதிகாரியும் அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கப்பலில் உள்ள தனது குடிமக்களை அழைத்துவர அமெரிக்க அரசாங்கம் முயல்வதாய் Wall Street Journal நாளேடு தெரிவித்துள்ளது.

கப்பலில் 3,700க்கும் அதிகமானோர் உள்ளனர்.

கிருமித்தொற்று இல்லையென உறுதியான மூத்த பயணிகளை கப்பலிலிருந்து வெளியேற்ற இன்று அனுமதி அளிக்கப்பட்டது. அவர்கள் அரசாங்கம் ஒதுக்கியுள்ள தனிமைப்படுத்தும் இடங்களில் எஞ்சிய நாள்களைக் கழிப்பர்.