ஜப்பானின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட இரண்டாம் காலாண்டில் அதிகரிப்பு!

ஜப்பானின் பொருளாதாரம் இரண்டாம் காலாண்டில் இன்றைய (வௌ்ளிக்கிழமை) நிலவரப்படி எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளது. வலுவான குடும்ப வருமானம், வணிக செலவு மற்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சிக்கன நடைமுறைகள் காரணமாக இந்த விடயம் சாத்தியமாகியுள்ளது.

ஜப்பானிய பொருளாதாரம் கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் 1.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன், மத்திய சந்தை கணிப்பின் படி 1.4 சதவீதத்தால் அது உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், ஜப்பானின் வெளியுறவு சூழல், அமெரிக்காவிற்கும் அதன் முக்கிய வர்த்தக பங்காளிகளுக்கும் இடையே காலாண்டில் அதிகரித்து வரும் வர்த்தகப் போரிலிருந்து ஏற்றுமதிகளுக்கு எந்தவொரு நேரடி தாக்கமும் இல்லாமல் குறைந்த சாதக தன்மையை வௌிக்காட்டியது.

ஜப்பானின் நிதியமைச்சர் டாரோ ஆசோ செய்தியாளர்களிடம் கூறுகையில், ஐக்கிய அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக விரோதத் தன்மை ஜப்பானின் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ளுமாறு டோக்கியோ மீது அழுத்தம் பிரயோகித்து வருகின்றார்.

அதேவேளை, ஏற்றுமதித் துறையை பாதிக்கும் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜப்பானுடனான வாகன இறக்குமதிகளில் அதிக தீர்வை வரி கட்டணத்தை சுமத்தவுள்ளதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !