ஜனாதிபதி மைத்திரி பிரித்தானியா விஜயம்

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

நாளைய தினம் லண்டனில் ஆரம்பமாகவும் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு, எதிர்வரும் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

‘பொதுவான எதிர்காலம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில், இலங்கை சார்பில் ஜனாதிபதி விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 22ஆம் திகதிவரை பிரித்தானியாவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி, பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவுள்ளார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !