ஜனாதிபதி மைத்திரிக்கு லண்டனில் உற்சாக வரவேற்பு!

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில், பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு (ஞாயிற்றுக்கிழமை) லண்டன் நகரை சென்றடைந்த அவருக்கு, அந்நாட்டு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு, இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 21ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் ‘பொதுவான எதிர்காலம்’ என்ற தொனிப்பொருளில், இலங்கை சார்பில் ஜனாதிபதி விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 22ஆம் திகதிவரை பிரித்தானியாவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி, இதன்போது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !