Main Menu

“ஜனா­தி­பதி தேர்­தலில் நானே வேட்­பா­ள­ராக களம் ­இ­றங்­க­வுள்ளேன்”: ரணிலின் கருத்தால், கட்சிக்குள் முரண்பாடு

ஜனா­தி­பதி தேர்­தலில் நானே வேட்­பா­ள­ராக  கள­மி­றங்­க­வுள்ளேன். கட்­சியை ஒன்­றி­ணைத்து தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்கும் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை கையாள தயா­ரா­குங்கள் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசிய கட்­சியின்  சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளிடம் நேற்று அலரி மாளி­கையில் இடம்­பெற்ற விசேட சந்­திப்­பின்­போது தெரி­வித்­துள்ளார். 

மேலும் இந்த சந்­திப்­பின்­போது சஜித், -ரணில் இரு­வ­ரையும் தனித்து கலந்­து­ரை­யா­ட­வைக்க கட்­சியின் சிரேஷ்ட தலை­மைகள் முயற்­சி­யெ­டுத்­துள்­ள­துடன் இந்த சந்­திப்பை நாளை ஞாயி­றன்று நடத்­தவும் தீர்­மா­னித்­துள்­ளனர். 

ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் ஜனா­தி­பதி வேட்பாளர் குறித்த இழு­பறி நிலை நீடித்­து­வ­ரு­கின்ற நிலையில் ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் ரணில் அணி, – சஜித் அணி என இரண்டு அணி­க­ளாக செயற்­பட்டு வரு­கின்­றனர்.  

இந்த நிலை­யி­லேயே   நேற்­றைய தினம்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடையில் விசேட சந்­திப்­பொன்று அல­ரி­மா­ளி­கையில் இடம்­பெற்­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் அமைச்­சர்­க­ளான லக்ஸ்மன் கிரி­யெல்ல, கபீர் ஹாசீம், நவீன் திசா­நா­யக, மலிக் சம­ர­விக்­கி­ரம, ரஞ்சித் மத்­தும பண்­டார, தயா கமகே உள்­ளிட்ட பலரும் இந்த சந்­திப்பில்  கலந்­து­கொண்­டனர்.

 இதன்­போது  கட்­சியின் அடுத்த கட்ட முக்­கிய நட­வ­டிக்­கைகள் குறித்து  பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது. ஆரம்­பத்தில் கட்­சியின் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கைகள் குறித்தும் கூட்­டணி உரு­வாக்கம் தொடர்­பா­கவும்  பேசிய நிலையில் பின்னர் ஜனா­தி­பதி வேட்­பாளர் யாரென்ற பிரச்­சி­னைகள் குறித்து கலந்­து­ரை­யாட  ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. 

இதன்­போது நானே ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்க தீர்­மானம் எடுத்­துள்ளேன். இது குறித்து உங்­களின் நிலைப்­பாடு என்­ன­வென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளிடம் கேட்­டுள்ளார். அதன்­போது கட்­சியின் உறுப்­பி­னர்கள் பலர் குறிப்­பாக அமைச்சர் கிரி­யெல்ல, நவீன், தயா கமகே, மத்­து­ம­பண்­டார ஆகியோர்  இணக்கம் தெரி­வித்­துள்­ளனர். நீங்கள் கட்­சியின் தலைவர் என்ற விதத்தில் உங்­க­ளுக்கு அதற்­கான உரிமை உள்­ளது என ஆமோ­தித்த கருத்­துக்­களை இந்த அமைச்­சர்கள் கூறி­யுள்­ளனர். 

எனினும் இதன்­போது அமைச்­சர்­க­ளாக கபிர் ஹசீம், மலிக் சம­ர­விக்­கி­ரம ஆகியோர் மாற்­றுக்­க­ருத்­துக்­களை முன்­வைக்க ஆரம்­பித்­துள்­ளனர், இப்­போது ஐக்­கிய தேசிய கட்­சியின் பக்கம் சஜித் அலை ஒன்று உரு­வாகி அவ­ருடன் இணைந்­துள்­ளதை  அவ­தா­னிக்க முடி­கின்­றது. அவ­ருக்­கான ஆத­ரவும் ஐக்­கிய தேசிய கட்­சிக்­கான வெற்றி வாய்ப்பும் அதி­க­மாக தென்­ப­டு­கின்­றன. ஆகவே இது குறித்து நாம் கவனம் செலுத்­தினால் ஆரோக்­கி­ய­மா­ன­தாக இருக்கும் என்ற கருத்­தினை இவர்கள் முன்­வைத்­துள்­ளனர். 

இதன்­போது தயா கம­கேவும் இந்த கருத்­தினை ஏற்­றுக்­கொண்டு இது குறித்து கவனம் செலுத்­து­வது நல்­ல­தென்ற கருத்­தினை கூறி­யுள்ளார். 

எனினும் இதற்கு பதில் தெரி­வித்த பிர­தமர் ரணில்  சஜித் பிரே­ம­தாச தான் ஜனா­தி­பதி வேட்­பாளர்  என்ற கார­ணத்தை கூறிக்­கொண்டு மக்­களை சந்­திக்­கின்ற கார­ணத்­தினால் தான் அவ­ருக்கு மக்கள் கூட்டம் கூடு­கின்­றது. இதுவே நானே  ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் என்ற கருத்தை கூறி உறு­தி­யாக நாம் கூட்­டங்­களை கூட்­டினால் இப்­போது சஜித் பிரே­ம­தா­ச­விற்கு கூடும் கூட்­டத்தை விடவும் பத்து மடங்கு ஆத­ர­வா­ளர்கள் எமக்கு ஆத­ரவை தெரி­விப்­பார்கள் என்று  குறிப்­பிட்­டுள்ளார். 

இந்­நி­லையில் அமைச்சர் கிரி­யெல்ல இதனை ஏற்­று­கொண்­ட­துடன் கட்­சியின் தவி­சாளர் கபீர் ஹசீ­முடன் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­டுள்ளார். அமைச்சுப் பத­வி­களை பொறுப்­பேற்க வேண்டாம் என கூறியும் ஜனா­தி­பதி முன்­னி­லையில் அமைச்­சினை பெற்­றுக்­கொண்­ட­தா­கவும்  , முன்னாள் பாது­காப்பு செய­லா­ளரும் பொது­ஜன முன்­ன­ணியின் தற்­போ­தைய ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரு­மான கோத்­தா­பய ராஜபக் ஷவை  இர­க­சி­ய­மாக சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தா­கவும் , கட்­சியின் ஒழுங்கு விதி­மு­றை­களை மீறி   கூட்­டங்­களை ஏற்­பாடு செய்து சஜித்தை பலப்­ப­டுத்­து­வ­தா­கவும்  ஜனா­தி­ப­தி­யுடன் இர­க­சி­ய­மாக பேசி தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­டு­கின்­றன என்றும்    சுட்­டிக்­காட்­டிய அமைச்சர் கிரி­யெல்ல  அமைச்சர் கபீர் ஹசீ­முடன் வாக்­கு­வா­த­ததில் ஈடு­பட்­டுள்ளார். 

இவ்­வாறு கட்­சியின் யாப்­பினை மீறி செயற்­ப­டு­வ­தென்றால் கட்­சியை விட்டு வெளி­யேறி தனித்து செயற்­ப­டுங்கள் எனவும்  கிரி­யெல்ல குறிப்­பிட்­டுள்ளார். 

எனினும் இடையில் குறுக்­கிட்ட அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம இரு­வ­ரையும் சமா­தா­னப்­ப­டுத்­தி­ய­துடன் மீண்டும் சஜித் பிரே­ம­தாச விவ­கா­ரத்தை நினை­வு­ப­டுத்­தி­யுள்ளார். 

இவ்­வாறு கட்­சியின் பெரும்­பான்மை ஆத­ரவும் மக்­களின் ஆத­ரவும் உள்ள ஒரு­வரை ஓரங்­கட்டி தனித்து முடி­வெ­டுப்­பதன் மூல­மாக இறு­தி­யாக ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் பிள­வு­களே ஏற்­படும். இதற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது என்­பதே எமது நிலைப்­பாடு. இது குறித்து பேசி இறுதித் தீர்­மானம் எடுப்போம் என்று மலிக் கூறவும்  கூறினார்.  

,  இதற்கு பதில் தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, கட்­சி­யாக பேசி தீர்­மானம் எடுக்க சஜித் தயா­ராக இல்­லாத கார­ணத்­தினால் தானே அவர்கள் தனித்து செயற்­பட்டு வரு­கின்­றனர். இவ்­வாறு இருக்­கையில் எவ்­வாறு பேசித் தீர்ப்­பது என்­பதை வின­வி­யுள்ளார். 

இதன்­போது பேச்­சு­வார்த்தை மூல­மாக தீர்வு காண முயற்­சி­களை எடுக்க வலி­யு­றுத்­திய அமைச்­சர்­க­ளான கபீர் ஹசீம் மற்றும் மலிக் சம­ர­விக்­கி­ரம இரு­வரும் அடுத்த கூட்­டத்தை கூட்ட முன்னர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ச­வையும் தனிதடது சந்திக்கவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்துள்ளளனர். 

 அதனூடாக  கட்சியாக தீர்மானம் எடுப்பதற்கான   பொது இணக்கப்பாடு ஒன்றினை எட்டவும் தாம் ஏற்பாடு செய்வதாகவும்   வாக்குறுதி வழகியுள்ளதுடன் நாளை ஞாயிற்றுக்கிழமை இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று இரவும் சஜித் அணியினருக்கு இடையில் தனிப்பட்ட சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமையும் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

பகிரவும்...