ஜனாதிபதி தேர்தலில் இடம் பெற்ற தவறுகள் பொதுத்தேர்தலில் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் – Paffrel அமைப்பு
இலங்கை அரசியல் வரலாற்றில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலே நீதியான முறையிலும், எவ்வித படுகொலைளை சம்பவங்களும் நடைபெறாமல் முடிந்துள்ளது.
இருப்பினும் ஒரு சில குறைப்பாடு காணப்படுகின்றனன. அடையாளப்படுத்தப்பட்ட குறைப்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு பொதுத்தேர்தலில் திருத்திக் கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பின் தலைவர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்தார்.
பெப்ரல் அமைப்பின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பாரதூரமான பிரச்சினைகள் ஏதுவும் பதிவாகவில்லை. இருப்பினும் ஒரு சில குறைப்பாடுகளும் காணப்படுகின்றன. ஊடகங்களை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் தோற்றம் பெற்ற பிரச்சினைகள் பொதுத்தேர்தலிலும் இடம் பெறுவதற்கு இடமளிக்க கூடாது.
ஜனாதிபதி தேர்தலில் பக்கச்சார்பான முறையில் செயற்பட்டதைப் போன்றல்லாமல் அனைத்து வேட்பாளருக்கும் சமமான நேரத்தை ஊடகங்கள் வழங்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த வேளையில் சமூக வலைத்தளங்களில் ஊடாக ஒரு தரப்பினருக்கு ஆதரவாக இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரங்கள் தேர்தல் சட்டங்களுக்கு முற்றிலும் விரோதமானது.
இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையோரில் 14 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மதத்தலங்களில் வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.
அத்துடன் நாடு தழுவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு மத்திய நிலையங்கள் பொதுத்தேர்தலுக்கு முன்னர் மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
தேர்தல் கடமைகளில் ஈடுப்படும் தனியார் ஊழியர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள தூதரங்களின் ஊடாக வாக்களிப்பதற்கான நடவடிக்கைகளை பொதுத்தேர்தலில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அவசியமாகும் என அவர் இதன்போது தெரவிததார்.
பகிரவும்...